மூதாட்டி அளித்த மனுவிற்கு உடனடி தீர்வு ஆட்சியர் அதிரடி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மூதாட்டியின் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.;

Update: 2025-02-01 11:14 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி(65). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 27ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், புதிய குடும்ப அட்டை, அரசின் இலவச வீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வேண்டி மனு அளித்தார். இதையடுத்து மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் புதிய குடும்ப அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. இவர் மாதந்தோறும் ரூ.1,200 முதியோர் உதவித்தொகை பெற்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் யுடிஐடி அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டு, கடும் ஊனமுற்றவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2,000 வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை கால் வழங்குவதற்கு அளவீடு செய்யப்பட்டது. மூதாட்டியின் வீட்டை புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரடியாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்று மேற்கண்ட பணிகளை செய்தனர்.

Similar News