தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியான ஆவணத்தை கொண்டு பணம் கையாடல்
போலியான ஆவணத்தை கொண்டு 81,740 ரூபாய் பணத்தை கையாடல் செய்த குற்றத்தில் குற்றவாளிக்கு 1 வருடம் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய பெரம்பலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.;
கடந்த 2010–ம் ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியான ஆவணத்தை கொண்டு 81,740 ரூபாய் பணத்தை கையாடல் செய்த குற்றத்தில் குற்றவாளிக்கு 1 வருடம் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய பெரம்பலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், குன்னம் கிராமம் தேரடி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் லட்சுமணன் என்பவர் பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் அக்ரஹாரம் கிராமத்தில் இருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வந்ததாகவும் போலியான ஆவணம் தயாரித்தும், போலியாக கையொப்பமிட்டும் சங்க உறுப்பினர்களின் கணக்கில் இருந்து பணம் ரூபாய்.81,740 கையாடல் செய்ததாக பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட துணைப் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2010 –ம் ஆண்டு 15/2010 U/s 406, 408, 409, 420, 120 (b), 468, 477(A), 218 r/w 34 IPC –ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று 01.01.2025 –ம் தேதி வழக்கினை விசாரித்த பெரம்பலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1- ன் நீதிபதி அவர்களின் விசாரணையில் மேற்படி எதிரியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் எதிரிக்கு *1 வருடம் சிறை தண்டனை வழங்கியும் அபராதம் ரூபாய்.5000 விதித்து நீதிபதி திரு.பிரேம்குமார் அவர்கள் தீர்ப்பளித்தார்.