பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகைப்பட கண்காட்சி
புதுடெல்லி தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் இந்த புகைப்பட கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு;
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகைப்பட கண்காட்சி முகாம் மாண்புமிகு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியும் ஆகிய A. பல்கீஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் பேசியதாவது இந்த முகாம் மாண்புமிகு புதுடெல்லி தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் இந்த புகைப்பட கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் கடந்த வருடங்கள் நடைபெற்றது. அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக எடுத்து இந்த புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தெரிந்து கொள்ளுமா று வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளியை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் அவர்களிடம் வழக்கறிஞர் திருஞானம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் சேவைகள் குறித்தும் தெளிவாக மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மேலும் புகைப்பட கண்காட்சியினை மாணவர்கள் உடன் குடும்ப நல மாவட்ட நீதிபதி தனசேகரன் அவர்களமகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி இந்திராணி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் சார்பு நீதிபதி அண்ணாமலை மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1. பிரேம்குமார் மற்றும் பயிற்சி நீதிபதிகள் உடன் பெரம்பலூர் பார் அசோசியேசன் சங்கத் தலைவர் வள்ளுவன் நம்பி மற்றும் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் திரு செந்தாமரைக்கண்ணன் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியாளர்களும், சட்டத்தண்ணார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த புகைப்பட கண்காட்சியினை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். புகைப்பட கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சட்டப் பணிகளின் ஆணைக் குழுவின் செயலாளரும் /சார்பு நீதிபதியுமாகிய தபி. மகேந்திரவர்மா உட்பட கூட இருந்தனர்.