மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த விவகாரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

கேரளாவில் இருந்து லாரியில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த விவகாரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-02-02 14:30 GMT
பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம் பாளையத் தில் நேற்று முன்தினம் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் 6 மாதங்களாக கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் எரித்து பண்டல் தயாரிப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பொன்னுசாமியிடம் உடனடியாக வைக்கப்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்து மாறு உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று மாசு கட் டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கு சுமார் 15 டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதனை தொடர்ந்து பொன்னுசாமி மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

Similar News