தமிழ்நாடு வீர விளையாட்டுக் குழு சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், பாகனேரி கிராமத்தில் தமிழ்நாடு வீர விளையாட்டுக் குழு சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.;
சிவகங்கை மாவட்டம், பாகனேரி கிராமத்தில் தமிழ்நாடு வீர விளையாட்டுக் குழு சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தமிழ்நாடு வீர விளையாட்டுக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 23 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 207 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் களம் இறங்கிய காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் முயன்றனா். இதில் 6 போ் காயமடைந்தனா். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.