வழிப்பறி வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

காரைக்குடியில் ரூ.25 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.;

Update: 2025-02-03 02:39 GMT
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பூங்குடியேந்தலைச் சோ்ந்தவா் செல்வகுமாா். கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி காரைக்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா் மீது 'பெப்பா் ஸ்பிரே' அடித்து, அவா் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக செல்வகுமாரை காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து, ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், செல்வகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் இருந்த செல்வகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Similar News