சிவன்மலை தைப்பூச தேரோட்டம் புதிய சன்னமரம் தயாரிக்கும் பணி மும்மரம்

சிவன்மலை தைப்பூச தேரோட்டம் புதிய சன்னமரம் தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றது;

Update: 2025-02-03 04:50 GMT
காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் தை மாதத்தில் தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடிக்கும் தேருக்கு நேற்று முதல் தேர்களில் மராமத்து பணிகளும்,தேரை சரியாக செலுத்த சன்னமரம், குடில் கட்டைகள் ஆகியவையும் புதிதாக தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Similar News