பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மூலனூர் அருகே திறமையும் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்;
மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா கணபதி, பகவதி அம்மன், மாகாளி அம்மன், முனியப்பசாமி கோவிலில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கி ஒரேநேரத்தில் நான்கு தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.