அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி
அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி;
திருச்செங்கோடு நகர திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக நிறுவன தலைவருமான அண்ணாவின் 56வது நினைவு தினத்தை ஒட்டி அமைதி பேரணி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் நகராட்சி வளாகம் முன்பு உருவப்படத்திற்கு மலர் தூய்மை மரியாதை நகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தல் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதரா செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்தலைமை கழக செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகர திமுகசெயலாளர் கார்த்திகேயன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் வட்டூர்தங்கவேல்,மாவட்டத் துணைச் செயலாளர் மயில்சாமி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் ரியா, மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் திருமலை, முன்னாள் மாவட்ட அவை தலைவர் தாண்டவன்,மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.பழைய பேருந்து நிலையம்அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துநான்கு ரத வீதிகள் வழியாக அமைதி பேரணி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நகராட்சி வளாகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரு உருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர் தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதேபோல் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு , ஆணையாளர் அருள் பொறியாளர் சரவணன், உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.