பணம் பறிமுதல்

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.54.13 லட்சம் பறிமுதல்;

Update: 2025-02-04 04:55 GMT
பணம் பறிமுதல்
  • whatsapp icon
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் மூலம் இதுவரை ரூ.54.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(5ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், கொல்லம்பாளையம், காளைமாட்டு சிலை, அரசு மருத்துவமனை, பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்களின்றி எடுத்து வந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதில், கடந்த மாதம் 7ம் தேதி முதல் நேற்று வரை ஆவணங்களின்றி பணம் எடுத்து வந்ததாக 31 பேரிடம் இருந்து ரூ.54 லட்சத்து 13 ஆயிரத்து 60 ரொக்கம் பறிமுதல் செய்தனர். இதில், 22 பேர் ஆவணங்கள் வழங்கியதன்பேரில், பறிமுதல் செய்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்து 560 ரொக்கம் சம்மந்தப்பட்டவர்களிடம் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.13 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரொக்கம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Similar News