எலவம்பட்டி அருகே நூதன முறையில் தொடர் கொள்ளை! அப்பகுதி மக்கள் பீதி கந்திலி போலீசார் விசாரணை!
எலவம்பட்டி அருகே நூதன முறையில் தொடர் கொள்ளை! அப்பகுதி மக்கள் பீதி கந்திலி போலீசார் விசாரணை!;
திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி அருகே நூதன முறையில் தொடர் கொள்ளை! அப்பகுதி மக்கள் பீதி கந்திலி போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் ஒரு மாத காலமாக பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது இன் நிலையில் சிலம்பு நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் கௌரி இவர்கள் இவர்கள் காளியம்மன் கோயில் அருகில் டீ கடை நடத்தி வருகிறார்கள் இரவு டீ கடையை மூடிவிட்டு இரவு சுமார் 11 மணி அளவில் வீட்டிற்க்கு வந்து தூங்கி உள்ளனர் மர்ம நபர்கள் கள்ள சாவியை போட்டு கதுவை திறந்து தூங்கி கொண்டிருந்த கணவன் மனைவி மீது மயக்க தெளிப்பானை தெளித்து விட்டு வீட்டில் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த இருந்த உண்டியல் மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகை 10 ஆயிரம் மதிப்பில் வெள்ளி அரனா கயிறு மற்றும் ரொக்க பணம் 25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டு வீட்டின் பின்புரம் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் தோட்டத்தில் உண்டியல் மற்றும் நகை ரசிதி ஆதார் அட்டை ரேசன் காடு உள்ளட்ட வங்கி டாக்மண்ட் உள்ளிட்டவைகளை வீசிவிட்டு சென்றுள்ளனர் இந்நிலையில் மயக்க நிலையில் இருந்த கணவன் மனைவி விடியற்காலை எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போய் கூச்சல் பொடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதேபோன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டின் மேல் தளத்தின் பூட்டை மர்ம நபர்கள் உடைக்கவே உடைக்கும் சத்தம் கேட்டு ஆறுமுகம் கூச்சல் போட்டுள்ளார் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க பயன்படுத்திய கூர்மையான ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர் இந்த எலவம்பட்டி கிராம பகுதியில் ஒரு மாத காலமாக கோயில் மற்றும் வீடுகளில் பல்வேறு பகுதிகளில் பணம் மற்றும் நகைகள், மற்றும் சிலை விக்கிரகங்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் தொடர் திருட்டால் அப்பகுதி மக்கள் பீதிஅடைந்து வருகின்றனர் திருட்டு சம்பவம் குறித்து கந்திலி போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் பேட்டி. கோவிந்தன் கௌரி விவசாயி