நூற்றாண்டு கண்ட அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

நூற்றாண்டு கண்ட அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா;

Update: 2025-02-04 10:30 GMT
திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரம் பேர்படித்து வருகின்றனர். பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளி ஆகும் இந்தப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர்பாலாஜி தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளரும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Similar News