இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளரை காருடன் சிறைப் பிடித்த போலீசார்
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளரை காருடன் சிறைப் பிடித்த போலீசார் நெடுஞ்சாலை வாகனத்தை குறுக்க போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சியினர் தரதரவென்று இழுத்து சென்று கைது செய்த போலீசார்;
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என திருப்பூர் நகர போலீசார் தடுத்த போது தடையை மீறி அவர் தனது காரில் மதுரையை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து அவரது காரை துரத்தி வந்த திருப்பூர் நகர போலீசார் பல்லடம் பனைப்பாளையம் பகுதியில் இடைமறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த விரைந்து வந்த பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் நடுரோட்டில் காருடன் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த இந்து முன்னணி கட்சியை சேர்ந்த லோகநாதன் மற்றும் சக்திவேல் ஆகிய இரண்டு பேர் எங்களது மாநில பொதுச்செயலாளரை விடுவிக்க கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்லடம் திருப்பூர் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக தங்கள் சொகுசு காரை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பல்லடம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் ஆய்வாளர் மாதையன் இரண்டு பேரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்து முன்னணி கட்சியை சேர்ந்த லோகநாதனுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லோகநாதன் மற்றும் சக்திவேலை அடித்து தரதரவென்று இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றி பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காருடன் சிறைப்பிடித்து வைத்திருந்த மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமாரை திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்து விடுவித்தனர்.