திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி திடிர்ஆய்வு*
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி திடிர்ஆய்வு*;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி திடிர்ஆய்வு கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு பழக் கூடைகளை வழங்கி குறைகளை அனுசரணையுடன் கேட்டு அறிந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சியராக சிவ சௌந்திரவல்லி நேற்று ஐந்தாவது ஆட்சியராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று மாலை திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் வெட்டுக்காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தங்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளை கூறினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை ஆட்சியர் சிவசௌந்தரவல்லி திடீரென மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது நோயாளிகளிடம் சென்று முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா ஏதேனும் குறைகள் உள்ளதா மருத்துவர்கள் உங்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்து குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் சிகிச்சைக்காக வந்திருந்த கர்ப்பிணிகளுக்கும் பிரசவவார்டில் சிகிச்சை பெற்று வரும் பிரசவித்த தாய்மார்களுக்கும் பழக் கூடைகளை வழங்கி அவர்களிடம் அனுசரணையாக குறைகளை கேட்டு அறிந்தார். பிறகு மருத்துவர்களை சந்தித்த ஆட்சியர் மருத்துவமனையில் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் உரிய முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், குறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.