கிராம உதவியாளர்கள் போராட்டம்

கிராம உதவியாளர்கள் போராட்டம்;

Update: 2025-02-05 13:00 GMT
  • whatsapp icon
தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். திருச்செங்கோடு வட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வரையறுக்கப் பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும்புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழையஓய்வூ தியம்வழங்க வேண்டும்இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கிராம உதவியாளர்களுக்கு ஓட்டுனர் பணி வழங்கவேண்டும் 8.3.2023 அன்று நிறுத்தப் பட்ட கருணை வாரிசு அடிப்படை வேலை உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி திருச்செங்கோடு வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 11 பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் செங்கமலை தலைமை வகித்தார்.வட்டார தலைவர் கார்த்திகேயன், வட்டார செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த போராட்டம் நடக்கும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

Similar News