சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமை படை
சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமை படை பெரம்பலூர் இந்தோ அறக்கட்டளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் துணிப்பை வழங்கும் விழா;
அனுக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமை படை பெரம்பலூர் இந்தோ அறக்கட்டளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் துணிப்பை வழங்கும் விழா பள்ளியில் தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் திவ்யா மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமிகு முத்தமிழ்செல்வன் AEC அறக்கட்டளை பசுமை பயணம் அனுக்கூர் திருமிகுஇளையராஜா குராமசாமி இருபால் ஆசிரியர்கள் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது துணிப்பை பயன்படுத்த வேண்டும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகளிடையே பேசப்பட்டது மேலும் மரங்களை நடுவோம் மழை பெறுவோம் மரங்கள் என்றென்றும் நமக்கான நண்பனாக இருக்கும் என கூறினார். மரம் தற்போது நிழல் தருவது மட்டுமல்ல நமக்கு பின்னால் வரக்கூடிய நமது சந்ததிகளுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் பல்வேறு உடல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன அவற்றை தடுக்க நாம் அனைவரும் மரம் நடுவோம் எனக் கூற குழந்தைகளுக்கு சான்றிதழ்களோடு துணிப்பையும் வழங்கி பள்ளி ஆசிரியர் நன்றியுரை கூறி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.