வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம்;

Update: 2025-02-06 04:13 GMT
திருத்தணியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர் இந்தப் போராட்டத்திற்கு வட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் வட்டச் செயலாளர் விநாயகம் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினார் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு உரை நிகழ்த்தினார்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.வெண்ணிலா, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் பி.ரகுவரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜ், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் கே. கோட்டீஸ்வரி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மணிகண்டன், ஆகியோர்கள் பேசுகையில் 1) கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டு காலமாக தொடர்ந்து கோரிக்கை வைத்து நிறைவேற்றி கொடுக்க முன்வராத போது நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்., 2) கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் தவிக்கும் என்பதை புரிந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கினார் அதை கடந்த 23 ஆண்டு காலம் பயன் பெற்று வந்ததை நிறுத்தும் செய்ததை திரும்ப வழங்க வலியுறுத்தியும். 3) கடந்த 2007 ஆம் ஆண்டு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தின் பணி பார்த்து ஓய்வு பெற்ற இறந்து போன கிராம உதவியாளர்களின் பிடித்தம் செய்த தொகையும் அதற்கு உண்டான அரசு பங்கீடும் இது நாள் வரை வழங்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு வலியுறுத்தி இவர்கள் பேசினார்கள் இந்நிகழ்வில் வட்ட பொருளாளர் மதன்குமார் நன்றி உரையாற்றினார்..

Similar News