சரக்கு இறக்கும் லாரிகளால் பல்லடம் கடை வீதியில் போக்குவரத்து நெரிசல்
சரக்கு இறக்கும் லாரிகளால் பல்லடம் கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை;
பல்லடம் கடைவீதியில் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு சரக்கு வாக னங்களை இயக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் சில சரக்கு வாகனங்கள் போக்குவரத்து நேர கட்டுப்பாடுகளை மீறி கடைவீதிக்குள் வந்து சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது " தடை விதிக்கப்பட்ட நேரங்களில் இயங்கும் சரக்கு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.