ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த கிராம உதவியாளர்கள்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்ட 5 அம்சம் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற விட்டால் வருகிற 27, ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மாவட்ட செயலாளர் சந்திரசேகர், தெரிவித்துள்ளார்.;

Update: 2025-02-06 04:42 GMT
திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்ட 5 அம்சம் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற விட்டால் வருகிற 27, ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மாவட்ட செயலாளர் சந்திரசேகர், தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வருவாய் கிராமம் ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் ஆனது மாவட்ட பொருளாளர் குணசேகரன், தலைமையில், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை சார்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் 5 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தெரிவிக்கையில், கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டார் அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டில் கருணை அடிப்படையில் வாரிசுதாரருக்கு, ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டது, அத்தகைய திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்ப வழங்க வேண்டும் எனவும், கடந்த 2007 ஆண்டுக்கு பிறகு சிபிஎஸ் திட்டத்தில் வாயிலாக பணியாற்றி வந்து ஓய்வு பெற்று இறந்துபோன கிராம உதவியாளரிடம் இருந்து பிடிக்கப்பட்ட தொகையை அரசு பங்கிட்டுடன் வழங்கப்பட வேண்டும் எனவும், கிராம உதவியாளர்களை கிராம பணி மட்டும் அல்லாமல் பல்வேறு மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தி பனி சுமைகளை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வரும் செயல்பாட்டினை வருவாய் நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும், கடந்த 30 ஆண்டுகளாக கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றிக் கொடுக்க முன்வராத தமிழக அரசு எங்களுடைய 5 அம்சம் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், அப்படி நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அனைத்தும் கிராம உதவியாளர்கள் வருகிற 27 ஆம் தேதி ஒரு நாள் வேலை புறக்கணிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் மாநில துணை தலைவர் மணிகண்டன், முன்னாள் வட்ட செயலாளர் வேணு, இணை செயலாளர் ராஜினி, முன்னாள் மவட்ட தலைவர் ராமேஷ்பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News