வாணியம்பாடி அருகே காவல் உதவி ஆய்வாளரின் மனைவி விவசாய நிலத்தில் மின் மோட்டார் செலுத்த சென்றபோது எதிர்பாராவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே காவல் உதவி ஆய்வாளரின் மனைவி விவசாய நிலத்தில் மின் மோட்டார் செலுத்த சென்றபோது எதிர்பாராவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காவல் உதவி ஆய்வாளரின் மனைவி விவசாய நிலத்தில் மின் மோட்டார் செலுத்த சென்றபோது எதிர்பாராவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு அம்பலூர் காவல்துறையினர் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நிலையில், குணசேகரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில், இன்று குணசேகரனை அவரது குடும்பத்தினர் சிகிச்சையிற்காக ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், பின்னர் குணசேகரின் மனைவி சியாமளா தெக்குப்பட்டு பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் நீர் இறைப்பதற்காக மின்மோட்டாரை இயக்க நிலத்திற்கு சென்ற போது, எதிர்பாராவிதாமக கால் தவறி கிணற்றில் தவறி விழுந்துள்ளார் அதனை தொடர்ந்து அவரது மகன் தனது நிலத்திற்கு சென்ற தனது தாயை காணவில்லையென நிலத்திற்கு சென்று பார்த்த போது, சியாமளா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் சியாமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும், விவசாய நிலத்தில் நீர் இறைப்பதற்காக சென்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..