திருப்பத்தூர் அருகே நிலப்பிரச்சனை காரணமாக வீடு இடித்து தரை மட்டம்
திருப்பத்தூர் அருகே நில பிரச்சனை காரணமாக வீடு இடித்து தரைமட்டம் நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பு அலுவலரிடம் புகார் மனு;
திருப்பத்தூர் மாவட்டம் அகரம் கிராமத்தில் சொத்து பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி ஜேசிபி இயந்திரம் கொண்டு வீடு இடித்து தரை மட்டம்! வீட்டிலிருந்த பொருட்கள் சேதம்! அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார்!.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த கூலன் மகன்கள் முனிரத்தினம் மற்றும் நடராஜன்(57) ஆக இருவரும் 1998 ஆம் ஆண்டு அகரம் பகுதியில் சுமார் நான்கரை ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கி தனது தந்தை பெயரில் கிரையம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கூலனின் முதன் மகன் ஆன முனிரத்தினம் தனது தந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி திருவண்ணாமலைக்கு சென்று அழைத்துச் அந்த நான்கரை ஏக்கர் அளவில் சொத்தை தனது பெயருக்கு மாற்றி உள்ளார். அதன் பின்பு தந்தையை பராமரிக்காமல் இரண்டாவது மகனான நடராஜன் வீட்டில் விட்டுள்ளார். அதன் பின்னர் கூலன் உயிரிழந்த நிலையில் அந்த நான்கரை ஏக்கர் சொத்தும் தனக்கு சொந்தம் என நடராஜன் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. நடராஜன் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தானும் நிலத்தை வாங்க பணம் கொடுத்ததாகவும் மேலும் அந்த நிலத்தில் தனக்கு பங்கு உண்டு மேலும் காலங்காலமாக இந்த இடத்தை தான் அனுபவித்து வருவதாகவும் கூறி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் முனிரத்தினம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார். அதன் பின்பு அவருடைய மகனான கணேஷ் குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு சொத்துக்கள் அனைத்தும் தனக்கு சொந்தம் என முனிரத்தினம் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுதியுள்ளார். மேலும் அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை காலி செய்யக் கூறியும் பலமுறை நடராஜனுக்கு கூறிவந்துள்ளார். ஆனால் அதனை காலி செய்யாத காரணத்தால் ஆத்திரமடைந்த கணேஷ் இன்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது அடியாட்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து வீட்டை இடித்து தரமட்டம் ஆக்கி உள்ளார். இதனை அறிந்த நடராஜன் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நான் வீட்டில் இல்லாத போது வீட்டை இடித்து தரை மட்டம் ஆக்கி உள்ளனர் எனவும் கத்தி கதறினார். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடராஜன் தனது அண்ணன் மகனான கணேஷ் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர் வீட்டில் யாரும் இல்லாத போது ஒரு முதியோர் வீட்டை இடித்து தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.