திருப்பத்தூர் இணை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் இணை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் இணை சார் பதிவாளர் எண் 2 அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நிலுவையில் இருந்த பத்திரப்பதிவு கட்டணங்கள் சுமார் 15 லட்சம் ரூபாய் வசூல். தொடர்ந்து நடைபெறும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டி இணை சார் பதிவாளர் கோரிக்கை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இணை சார பதிவாளர் அலுவலகம் 1 மற்றும் 2 இயங்கி வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அவரவர் தேவைக்கேற்ப நிலங்களை வாங்குவதும் விற்பதும் அதற்கான கட்டணங்களை செலுத்துவதும் முறையாக அரசு விதிமுறைப்படி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்... தவிர்க்க முடியாத சில நேரங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கட்ட முடியாமல் பத்திர பதிவு செய்து முடித்து சென்றவர்கள் நிலுவையில் உள்ள அரசுக்கு சேர வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு 47 A சட்ட விதிமுறைப்படி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இயங்கும் இணை சார் பதிவாளர் எண் 2 அலுவலகத்தில் இணை சார் பதிவாளர் ஷர்மிளா தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழக்கமாக கட்ட வேண்டிய கட்டணத்திலிருந்து நிலுவையில் உள்ள கட்டணத்தில் சலுகை பெற்று தங்களது கட்டணத்தை செலுத்தி சென்றனர் இதில் நிறைவாக திருப்பத்தூர் இணை சார் பதிவாளர் எண் 2 மற்றும் 1 ஜோலார்பேட்டை சார் பதிவாளர் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கட்டி சென்றனர் இதனால் அரசுக்கு நிலுவையில் இருந்த தொகை வரவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போன்று பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடக்கும் சிறப்பு முகாம்களில் பத்திரப்பதிவு கட்டணங்களில் நிலுவை இருப்பவர்கள் சலுகை அடிப்படையில் கட்டி பயன்பெறுமாறு திருப்பத்தூர் மாவட்ட இணை சாரப்பதிவாளர் எண் 2 அலுவலக இணை சார் பதிவாளர் ஷர்மிளா கோரிக்கை விடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது