தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தெக்கலூரில் திருப்பூர் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குறைத்த கூலியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-02-07 14:49 GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பூர் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் சார்பில் சோமனூர் தெக்கலூர் புதுப்பாளையம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்த நடப்பு ஆண்டில் மட்டும் நமது கூட்டமைப்பு மூலமாக 32 முறை மத்திய மாநில அரசு அதிகாரிகளையும், ஜவுளி துறை சார்ந்த அதிகாரிகளையும் தொடர்ந்து 32 முறை நியாயமான நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் எடுத்துரைத்தும் அனுகினோம். ஆனால் இதற்கு இதுவரை எந்தவிதமான பலனும் விசைத்தறியாளர்களுக்கு கிடைக்கவில்லை மற்றும் ஜவுளிதுறையில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சுல்சர் ரேப்பியர் ஏர்ஜெட் போன்ற நவீன தறிகளால் நாடாவில் இயங்கும் சாதா விசைத்தறிகளுக்கு தனி ரகம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மின்கட்டண உயர்வில் இருந்து பாதுகாக்க மத்திய மாநில அரசு சோலார் பேனல் 100 என்கிற திட்டத்தை அமல்படுத்தி விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்கள் கேட்காத இலவசங்களை அள்ளி வழங்குகிறது. தொழில் செய்வோரை அரசுகள் கண்டுகொள்ளாமல் வரிசுமையை பரிசாக வழங்குகிறது. இதை கவனத்தில் கொண்டு ஆளும் அரசுகளை கண்டித்து நமது கோரிக்கை நிறைவேறும் வரை மத்திய, மாநில அரசையும் கூலி உயர்வு மற்றும் கூலி பில்லை கொடுக்க மறுக்கும் டெக்ஸ்டைல்ஸ் அதிபர்களை கண்டித்தும் தெக்கலூரில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News