முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்...

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்...;

Update: 2025-12-23 15:59 GMT
இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)யில் இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக இரத்ததான முகாமானது கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இம்முகாமினை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார் மற்றும் சமுதாய செயல்பாட்டுத் தலைவர் முனைவர் எம். ராமமூர்த்தி, இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ந. ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில், சேலம், மாருதி இரத்த வங்கிக்காக கல்லூரி மாணவர்கள் சுமார் 56 யூனிட் இரத்தத்தை தானமாக வழங்கினர். அவர்களுக்கு பழச்சாறு மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன. இரத்ததானம் செய்த மாணவர்களுக்கு இரத்தவங்கியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் யுவராஜ மற்றும் மாருதி அறக்கட்டளையின் மேலாளர் திரு எஸ்.எம். வெங்கடாசலம் அவர்களும் இணைந்து சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.

Similar News