நகராட்சிக்கு வரி பாக்கி வணிக நிறுவனத்திற்கு ஜப்தி நோட்டிஸ்
நகராட்சிக்கு ரூ.3¾லட்சம் வரி பாக்கி வணிக நிறுவனத்திற்கு ஜப்தி நோட்டிஸ் ;
தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக நிறுவனம் நகராட்சிக்கு ஒரு ஆண்டு சொத்து வரியான ரூ.3லட்சத்து 87ஆயிரத்து 343 செலுத்தவில்லை. இதையடுத்து 24 மணி நேரத்திற்குள் வரி செலுத்த வேண்டும் இல்லை என்றால் ஜப்தி செய்யப்படும் என்ற நோட்டீசை கடையில் நகராட்சி வருவாய் அலுவலர் உமா காந்தி, வருவாய் ஆய்வாளர் கமலவாணி உள்பட வருவாய் பிரிவினர் ஒட்டி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி வருவாய் அலுவலர் உமா காந்தி கூறுகையில் தாராபுரம் நகராட்சியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது சொத்து வரியை நிலுவையின்றி உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என்றார்.