பெண் எஸ்ஐ மீதான தாக்குதலில் உண்மையில்லை மாவட்ட காவல்துறை விளக்கம்
சிவகங்கை மாவட்டம், சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐ மீதான தாக்குதலில் உண்மையில்லை என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரணிதா. பிப்.5-ம் தேதி இரவு பணியில் இருந்த தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி இளைய கவுதமன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் தெரிவித்தார். மேலும் அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை சார்பு ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மேலும் பிப்.05 மாலை அமராவதி புதூரில் கோயில் நிலத்தகராறு தொடர்பாக இருபிரிவினர் சோமநாதபுரம் காவல் நிலையம் வந்தனர். இதை உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் விசாரித்தார். இதில் பிரணிதா தலையிட்டார். அப்போது பிரணிதாவுக்கும், இளைய கவுதமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விசாரணைக்கு வந்தோர் சென்றுவிட்டனர். இதனி டையே பிரணிதா தன்னை 10 பேர் தாக்கியதாக மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் உடல்நிலை சீராக இருப்ப தால் உள்நோயாளியாக அனு மதிக்க தேவையில்லை என்று கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே பொதுமக்களின் குற்றச்சாட்டு களுக்காக பலமுறை எச்சரிக்கப் பட்டுள்ளார். பெண்கள் மற்றும் பெண் போலீஸாருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பெறப் படும் புகார்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரணிதா குற்றச்சாட்டு பொய்யானது. இருப்பினும் விரிவான விசாரணை நடத்தப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.