குருதி கொடையாளருக்கு பாராட்டு
உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.;
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குன்னம் வட்டம், பீல்வாடி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரத்தம் வங்கி பிரிவில் இன்று பெரம்பலூர் வட்டம் செங்குணம் தெய்வத்திரு சின்னதுரை மகன் கார்த்திக் என்பவர் ஓ_நெகட்டிவ் வகை இரத்தம் வழங்கி உதவினார். இவரின் இரத்தம் கொடை வழங்கிய இந்த செயலுக்கு பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். செங்குணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ம.ப.தனராசு, பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் உடனிருந்தனர்.