ஆம்பூர் அருகே மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்..

ஆம்பூர் அருகே மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்..;

Update: 2025-02-08 09:12 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், காந்திநகர் பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மின்சார வாரிய பொறியாளர் அலுவலகத்திற்கு, பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகம் போதிய, வாடகை நிதி செலுத்தாததால், மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தை வேறு கிராமத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக வந்த தகவலையடுத்து, மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தை வேறு கிராமத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது என, பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரியாங்குப்பம் பகுதியில் இருந்து, நாச்சியார்குப்பம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..

Similar News