பெண் கொலையில் நான்கு பேர் கைது காவல்துறை அதிரடி நடவடிக்கை
பெண் கொலையில் நான்கு பேர் கைது காவல்துறை அதிரடி நடவடிக்கை;
மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏமப்பள்ளி கிராமம் பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கடந்த 20 10 2024 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இமயவரம்பன் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா மற்றும் மொளசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இறந்து போன பெண் ஈரோட்டை சேர்ந்த சுதா (30),க/பெ சிவக்குமார், டவர் லைன், நாராயண வலசு, ஈரோடு என்பது தெரியவந்தது. இதில் இறந்த போன சுதாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரித்ததில் அவரது உடன் பிறந்த தம்பி மணிகண்டன் தனது அக்கா சுதாவின் தவறான பழக்க வழக்கத்தை கண்டித்தும், அக்காவிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருக்கவும், மணிகண்டன் அவரது மனைவி பவித்ராவும் பவித்ராவின் தோழி கதீஜாவும் மணிகண்டனின் நண்பன் அசோக் குமாரும் இணைந்து சுதாவை கொலை செய்தது தெரிய வந்தது . கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக மணிகண்டன் தனது வீட்டுக்கு வரவழைத்து,அசோக்குமார், பவித்ரா, கதீஜா ஆகியோரது உதவியுடன் பாலீத்தின் கவரால் முகத்தை மூடியும் துணியால் கழுத்தை நெறித்து கொன்று அங்கிருந்து ஒரு காரின் மூலம் மேற்கண்ட இடத்தில் இறந்து போன சுதாவின் உடலை போட்டுவிட்டு அவரது செல்போனை காவிரி ஆற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக தீவிர விசாரணை செய்ததில் எதிரிகள் பயன்படுத்திய செல்போன் மூலமும் இறந்து போன சுதாவின் இரு சக்கர வாகனத்தை மேற்படி கதிஜா என்பவர் தனிநபர் ஒருவரிடம் அடமானம் வைத்ததை கண்டுபிடித்தும், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, எதிரிகளை கைது செய்யப்பட்டது. எதிரிகள் நால்வரும் குமாரபாளையம் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறை மற்றும் சேலம் பெண்கள் மத்திய சிறையில் காவல் அடைப்பில் அடைக்கப்பட்டுள்ளனர்.