புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.;
பெரம்பலூரில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சங்க மண்டல செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டி பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஷமீம்ஷா, மதன்குமார், கேசவ்பாலாஜி, தங்கவேல் , நிருபா, சுவாதிகா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் முருகேசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.