புத்தகத் திருவிழாவில் பிக் பாஸ் முத்துக்குமார்
எழுத்தாளர் - இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் , பிக்பாஸ் புகழ் ஜெ.முத்துக்குமரன் , கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.;
பெரம்பலூர் மாவட்டம் எழுத்தாளர் - இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் , பிக்பாஸ் புகழ் ஜெ.முத்துக்குமரன் , கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் நகராட்சித்திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழாவின் ஒன்பதாவது நாளான ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் புத்தக அரங்குகளை ஆர்வமுடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில்,ஒரு லட்சத்திற்குப் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தகத்திருவிழாவில் வாங்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றது. இன்றைய நிகழ்ச்சிகளை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைத்தனர். இன்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர் - இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் "ஊராண்மை என்னும் செருக்கு" என்ற தலைப்பிலும், பிக்பாஸ் புகழ் ஜெ.முத்துக்குமரன் "நல்லார் வழங்கு நெறி" என்ற தலைப்பிலும், கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். ஏராளமான பொதுமக்கள் சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள், கவிஞர்களின் கருத்துரைகளை கேட்டு மகிழ்ந்தனர். நிறைவு நாளான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெறும் நிகழ்வில், பேராசிரியர், முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் "கற்றல் நன்று" என்ற தலைப்பிலும், கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் "புதியதோர் உலகு செய்வோம்" என்ற தலைப்பிலும், வழக்கறிஞர்.எம்.பி.நாதன் அவர்கள் "புதியன விரும்பு" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.