பூலாம்பாடி: மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பூலாம்பாடி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன், விநாயகர், சுப்ரமணியர் ஆலயங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் நாளை முதல் தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.