தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்..

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்..;

Update: 2025-02-10 09:34 GMT
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் ஸ்ரீராம், மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வைரமுத்து, ஆகியோர், நாம்தமிழர் கட்சியில் பயணித்து வரும் நிலையில்,வாணியம்பாடி தொகுதியை சேர்ந்த சிலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளதாகவும், மேலும் வாணியம்பாடியை சேர்ந்த நாம்தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் தேவேந்திரன் என்பவர் வைரமுத்து, ஸ்ரீராம் ஆகியோரது பெயரை எழுதி கொடுத்ததால் நேற்று (08) நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன், ஸ்ரீராம், மற்றும் வைரமுத்து ஆகியோர் தங்களது கட்சியில் இணைந்துவிட்டதாக அறிவித்த நிலையில், நாங்கள் இதுவரையில் நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகவும், தங்களது பெயரை கெடுத்துவிட்டதாகவும் உண்மை தன்மை அறியாமல் செய்திவெளியிட்ட வேல்முருகன் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாம்தமிழர் கட்சியினர், வாணியம்பாடி நகர போலீசாரிடம் புகார் அளித்தனர்..

Similar News