மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்
சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 18 மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.02.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், மாவட்ட அளவில் கடந்த 23.02.2025 மற்றும் 24.02.2025 அன்று நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மொத்தம் 18 மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் பரிசாக ரூ.7,000/-மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் பரிசாக ரூ.5,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 317 மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) சீதாலெட்சுமி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.