மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் இயங்காது
சிவகங்கை மாவட்டம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
சிவகங்கை மாவட்டம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகின்ற 11.02.2025 அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3, உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்களை வருகின்ற 11.02.2025 அன்று (செவ்வாய் கிழமை) மட்டும் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் FL2, FL3, உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் வருகின்ற 11.02.2025 அன்று (செவ்வாய் கிழமை) மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.