ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம்
புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி எனும் செயலியை வடிவமைத்துள்ளது.;
தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி எனும் செயலியை வடிவமைத்துள்ளது. இந்த செயலியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளன. மணற்கேணி செயலி குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. பள்ளி உதவி ஆசிரியர் மைனாவதி இந்த செயலியை செல்பேசியில் பதிவிறக்கம் செய்வது, மாணவர்கள் செயலியை. பயன்படுத்தும் விதம் குறித்து பெற்றோர்களிடையே எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் செங்குணம் குமார் அய்யாவு உட்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.