தைப் பூசத்தை முன்னிட்டு ஆறுமுகசாமி மற்றும் விநாயகர் தேரோட்டம்

தைப் பூசத்தை முன்னிட்டு ஆறுமுகசாமி மற்றும் விநாயகர் தேரோட்டம்;

Update: 2025-02-11 09:32 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சைவ திருத்தலத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. கொங்கு ஏழு சிவத் தலங்களில் முதன்மையான தலம் திருச்செங்கோடு ஆகும். தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத் துடன் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று ஆறுமுக சுவாமி வள்ளி தேவசேனை திருக்கல்யாண உற்சவம்கைலாசநாதர் கோவிலில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோடு ஆறுமுகசாமி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை ஆறுமுகசாமி வள்ளி தேவ சேனையுடன்மலையடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து திருத்தேர் எழுந்தருளினார். இதனை அடுத்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர அமைப்பு மண்டல குழு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில், அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல், திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, கோயில் உதவி ஆணையர் ரமணி காந்தன்,திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அருணாசங்கர், பிரபாகரன், அர்ஜுனன் கார்த்திகேயன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், ஊர் கவுண்டர் ராஜா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், அசோக்குமார், புவனேஸ்வரி உலகநாதன், சண்முக வடிவு, செல்லம்மாள் தேவராஜன், திவ்யா வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் கிழக்கு ரத வீதியில் உள்ள நிலையை அடைந்தது. இதனை அடுத்து விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரகர கோஷமிட்டு முருகனை வழிபட்டனர்.முன்னதாக திருச்செங்கோடு எழுகரை மகாநாடு பாவடி பஞ்சாயத்து நாட்டாமைக் காரர்கள், காரியக் காரர்கள் காவடி எடுத்து ஆடியபடி 4 ரத வீதியை வலம் வந்தனர்.

Similar News