மயில் பாறை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா
மயில் பாறை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா திரளான பொதுமக்கள் சாமி தரிசனம்;
திருப்பத்தூர் மாவட்டம் மயில் பாறை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவில் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை தொடர்ச்சியின் அடிவார பகுதி குன்றின் மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மயில் பாறை பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகின்றார் வருடம் ஒரு முறை வரும் தைப்பூசம் திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தம் பாலமுருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர் இந்நிலையில் இன்று தைப்பூச திருவிழாவில் திரளான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் அரோகரா அரோகரா என்று பக்தி மணக்க தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி மேல தாளங்கள் இசை முழங்க பாலமுருகன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் இந்த தைப்பூச திருவிழாவில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்