கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
இரத்த வங்கி ஒன்றில் ஓ-பாசிட்டிவ் வகை இரத்தம் வழங்கி உதவினார் . உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.;
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள SPT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் நபர் ஒருவருக்கு வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க.செல்வராசு இன்று பெரம்பலூர் தனியார் இரத்த வங்கி ஒன்றில் ஓ-பாசிட்டிவ் வகை இரத்தம் வழங்கி உதவினார் . உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட முழு உடல் தான பதிவு முகாமில் தமது இயற்கை மரணத்திற்கு பிறகு முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தலைமை ஆசிரியராக பணி புரிந்தும், பெரம்பலூர் மாவட்ட சாரணர் அமைப்பு சிறப்புடன் வழி நடத்துவது மட்டுமல்லால், இன்றைய உயிர் காக்கும் சேவையை சமூக ஆர்வலர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரும் வாழ்த்தியுள்ளனர்.