விஷமங்கலம் பகுதியில் ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் முயற்சி*

விஷமங்கலம் பகுதியில் ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் முயற்சி*;

Update: 2025-02-12 07:21 GMT
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியில் ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் முயற்சி* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் வெவ்வேறு மாற்று சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சமூகத்தினர் அப்பகுதியில் உள்ள சேலத்து மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால் தங்களுக்கு வழி பாதை பாதிக்கப்படும் எனக்கூறி மற்றொரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர் இதனை அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் சம்பவத்திற்கு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான பேசியதின் பெயரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது..

Similar News