பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2025-02-12 08:56 GMT
கல்குவாரி உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் விலையை சமீபத்தில் உயர்த்தினர். இதைக் கண்டித்து, காரைக்குடி தாலுகா லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, லாரிகள் காரைக்குடி லாரிபேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், கட்டுமானப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கட்டிடப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை ஏற்றத்தால் வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விலை ஏற்றத்தை ஏற்க மறுக்கின்றனர். இதனால், அவற்றின் விலையை குறைக்க வேண்டும். மேலும், குவாரிகளில் லாரிகளில் ஏற்றப்படும் பொருட்களுக்கு 'டிரான்சிட் பாஸ்' முறையாக வழங்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

Similar News