குற்ற வழக்கில் ஈடுபட்ட வந்த இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இலங்கை முகாமை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேட்டில் குற்றவாளிகள் ரவிக்கரன் சசிகரன் ஆகிய இருவர் மீது குண்டு சட்டம்;

Update: 2025-02-12 10:04 GMT
குற்ற வழக்கில் ஈடுபட்ட வந்த இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான 1.ரவிகரன் 30/25 த/பெ இராமநாதன், No : 45 , இலங்கை அகதிகள் முகாம், துறைமங்கலம்,பொம்பலூர். மற்றும் *2.சசிகரன் 32/25 தlபெ ராமநாதன், No : 45 இலங்கை அகதிகள்முகாம், துறைமங்கலம், பெரம்பலூர். ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Similar News