திருச்சி: மகனின் ஜாமீனுக்காக வந்த பெண் நீதிமன்றத்தில் உயிரிழப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு;
திருச்சி எட்டரை கோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயா (56) இவரது மகன் சண்முகம் (37) வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில் விஜயா தனது மகனுக்கு ஜாமின் பெறுவதற்காக திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார். நீதிமன்ற வளாகத்தில் காற்று இந்த விஜயா மதியம் 2 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தார். நீதிமன்ற காவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி அமர்வு நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.