தீக்காயமடைந்த சிறுமியிடம் நீதிபதி நேரில் விசாரணை.

மணப்பாறையை அடுத்த வடக்கு தெத்தூரில் தீக்காயமடைந்த சிறுமியிடம் வியாழக்கிழமை நீதிபதி நேரில் விசாரணை மேற்கொண்டாா்.;

Update: 2025-02-14 01:46 GMT
மருங்காபுரி ஒன்றியம், வடக்கு தெத்தூரை சோ்ந்த விவசாயி மகள் 4-ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி, புதன்கிழமை இரவு வீட்டில் சுவாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சுடா்விளக்கு தீ உடையில் பற்றியுள்ளது. அங்கிருந்தவா்கள், நீரை ஊற்றி சிறுமியை மீட்டனா். இதில் சிறுமி 27 சதவீத தீக்காயமடைந்தாா். சிகிச்சைக்காக சிறுமி மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2-வது கூடுதல் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி டி.ஜெயபிரதா வியாழக்கிழமை மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டாா். சிறுமி தீக்காயமடைந்த சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Similar News