சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சிறையில் இருந்து ஜாமினில் வந்த வாலிபர் தலைமறைவானார்;
சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரை சேர்ந்த ராஜாவின் மகன் விஜய் (வயது 25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021-ம் ஆண்டு தங்கி வேலை பார்த்தார். அப் போது ஒரு சிறுமியை அவர் கர்ப்பமாக்கிய தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் விஜய் ஜாமீனில் வெளி யேவந்தார். பின்னர் அவர் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்படி துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சென்னை நெற்குன்றத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த விஜயை நேற்று கைது செய்த னர். பின்னர் அவரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். இதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின்படி விஜயைப் போலீசார் சிறையில் அடைத்தனர்.