ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ சங்கத்தை சேர்ந்த அருள் செல்வம் அங்கமுத்து ஆகிய இருவர் கூட்டு தலைமை தாங்கினார் போராட்டத்தை ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ராமு தொடங்கி வைத்தார் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் வட்ட பொறுப்பாளர் கார்த்தி வரவேற்று பேசினார் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் கால காலவரையறை இன்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களைய வேண்டும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90% மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர் வரும் 25ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர் இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராமு கூறும் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் கால வரையறை இன்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதியம் பெற்று வரும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் தமிழக அரசு இதனை ஏற்று ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிட்டால் வரும் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 75 பெண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதிகள் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக இளங்கோவன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமரன் திருச்செங்கோடு கல்வி மாவட்ட தலைவர் லோகநாதன் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்