பாஜக மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

பாஜக மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்;

Update: 2025-02-15 05:03 GMT
விஜய் லெட்டர் பேட் வைத்து கட்சி நடத்தி வருகிறார் சினிமாவிற்கு கால் கிஸ் கொடுப்பது போல அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் சினிமா பாணியில் அரசியலைக் கொண்டு செல்கிறார் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணி அவரது உடல் நிலையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது பொதுமக்கள் உடல் நிலையும் பார்க்க வேண்டும் அரசு மருத்துவமனைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் தமிழ்நாட்டின் எதிரி இந்தியாவின் எதிரி திமுகதான் என்றும் அதிமுக உள்ளிட்ட மற்ற உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலச் செயலாளர் விழுப்புரம் கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி செல்வம் மாவட்டத் தலைவர் சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுகதான் நமது முதல் எதிரி திமுகவினர் தான் தொடக்கப்பள்ளி முதல் அண்ணா பல்கலைக்கழகம் முதல் அனைத்து இடங்களிலும் உருவாகும் பிரச்சினைக்கு காரணம் திமுக நிர்வாகிகள் தான் என்ற அவர் திமுகவில் பொதுச் செயலாளர் பதவி முதல்வர் பதவியை பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்குவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர் வேங்கை வயல் பிரச்சனை இரண்டு ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் திமுகவை அட்ரஸ் இல்லாமல் செய்யும் அளவிற்கு செய்வோம் மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடித்து கட்டப்பட்ட அண்ணா அறிவாலய கட்டிடம் அந்த இயக்கம் இதற்கு மேல் இருக்காது புரியாமல் அமைச்சர் சேகர் பாபு பேசுகிறார் என்றும் அரசுமருத்துவமனையில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை அமைச்சர் மா சுப்பிரமணி அவரது உடல் நிலையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது பொதுமக்கள் உடல் நிலையும் பார்க்க வேண்டும் அரசு மருத்துவமனைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் முதல்வருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை 2026 தேர்தலில் முதல்வர் உணர்வார் தமிழ்நாட்டின் எதிரி இந்தியாவின் எதிரி திராவிட முன்னேற்ற கழகம் மட்டும் தான் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரைப் பற்றி பேசிவிட்டு எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் காந்தியை கொடுத்து வாக்குகளை பெற்றனர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது என்பதால் தான் தேர்தலை பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணித்தனர் என்றும் விஜய் லெட்டர் பேட் வைத்து கட்சி நடத்தி வருகிறார் சினிமாவிற்கு கால் கிஸ் கொடுப்பது போல அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் சினிமா பாணியில் அரசியலைக் கொண்டு செல்கிறார் சினிமா மோகத்தை வைத்து இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வே இல்லாமல் செய்வதே திமுகவின் நோக்கம் தமிழ் சினிமாவை அழித்து விட்டனர் அரசியல் அனுபவம் இல்லாமல் ரசிகர் மன்ற தலைவர்களை மாவட்ட செயலாளர்களாக மாற்றி அரசியல் செய்வது மக்கள் மத்தியில் எடுபடுமா என்பது கேள்விக்குறி சினிமா படங்களால் ஏமாற்றி அரசியலுக்கு வந்து விடலாம் என விஜய் நினைக்கிறார் விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் மட்டுமே அவருக்கு தமிழகத்தை பற்றியும் தமிழக தலைவர்களை பற்றியும் என்ன புரிதல் உள்ளது என்பது தெரிய வரும் என்றார்

Similar News