திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் அதிகாலையில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு.நகர காவல் துறையினர் தீவிர விசாரணை

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் அதிகாலையில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு.நகர காவல் துறையினர் தீவிர விசாரணை;

Update: 2025-02-16 04:09 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவர் கடந்த மூன்று மாதமாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.40 மணியளவில் திடீரென பெரிய வெடி சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது இதனால் கடையில் இருந்த பொருட்கள் சிதறி வெளியே கிடந்துள்ளன கடை முழுவதும் சேதம் அடைந்துள்ளது ஃபேன் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கடையிலிருந்து அனைத்து பொருட்களுமே வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளது மின் கசிவோ சிலிண்டர் எரிவாயு கசிவோ இல்லை என காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மர்மமான பொருள் ஏதேனும் உள்ளே இருந்ததா என்பது குறித்து நகர போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் கடையின் சட்டர் சுமார் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டு எதிரே உள்ள பள்ளி ஒன்றின் காம்பவுண்ட் சுவர் அருகே கிடந்தது இரும்பு சட்டர் வெடித்து சிதறும் அளவிற்கு என்ன வெடித்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வெடி விபத்தில் நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மேலும் அருகே உள்ள கடைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த வெடி விபத்தில் சிசிடிவி காட்சிகளில் தீப்பொறி உடன் வெடி வெடித்தது மட்டுமே தெரிகிறது இது குறித்து தடைய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்து கூறினால் தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுது என்பது குறித்து போலீசார் விசாரணை மர்ம பொருள் வெடித்ததால் கடையின் ஷட்டர் ஐம்பது அடி தூரம் பறந்து சென்று விழுந்தது வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை*

Similar News