திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் மத்திய சிறை கைதி உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்;
அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (89). இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் இவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 12 ஆம் தேதி சிறை அதிகாரிகளால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குப்புசாமி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.