நடுவீதியில் அமர வைத்து பீர் சிகரெட் சிக்கன் பிரியாணி சாப்பிட வைத்து பேய் ஓட்டும் சாமியார்

பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாக கூறி பெண்ணை நடுவீதியில் அமர வைத்து பீர் சிகரெட் சிக்கன் பிரியாணி சாப்பிட வைத்து பேய் ஓட்டும் சாமியார்;

Update: 2025-02-17 04:56 GMT
பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாக கூறி பெண்ணை நடுவீதியில் அமர வைத்து பீர் சிகரெட் சிக்கன் பிரியாணி சாப்பிட வைத்து பேய் ஓட்டும் சாமியார். அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பீதியில் பயந்து ஓட்டம். பேய் ஓட்டிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி 2 வது ரயில்வே கேட் அருகே காந்தி ரோடு 2வது தெருவில் குடியிருப்புகள் கடைகள் நிறைந்த பகுதியாகும் இவ்வழியாக பூ மார்க்கெட், மளிகை கடை, பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகும் இப்பகுதியில் பழனி சாமியார் என்பவர் வாடகைக்கு கடை எடுத்து பில்லி சூனியம், திருஷ்டி கழிப்பது, தோஷம், மந்திரம் சொல்வது, தாயத்து கட்டுவது, போன்றவற்றை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் உடலில் பேய் புகுத்ததாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் பழனி சாமியாரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் பழனி சாமியார் பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாக கூறி நடுவீதியில் அமர வைத்து பிரியாணி,மது, புகையிலை,பீடி, கொடுத்து அந்தப் பெண்ணை மது குடிக்க வைத்து அவரது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேய் ஓட்டும் சாமியாரின் செயல்களால் அவ்வழியாக வந்த பெண்கள் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி அச்சத்துடன் ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.மேலும் அருகில் இருந்த கடைகளில் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து பயந்து ஓட்டம் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேய் ஓட்டுவதாக கூறி நடுவீதியில் அமர வைத்து அத்து மீறி நடந்து கொண்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

Similar News